Welcome Guys

வருகையாளர்கள்

வடக்குமாங்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜமாஅத்.காம். Powered by Blogger.

புதிய ஆக்கங்கள்.

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!


பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.

உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.

வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.

கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது பெண் சிசுக் கொலை பெண் வீட்டுக்காரன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகின்றது. அதனால் இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகப் புரட்சி

பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல் வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை அல்லது தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெண் வீட்டில் விருந்து வைத்தே தீருவோம்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கின்றது.

ஒரு காலத்தில் பெண் வீட்டிலிருந்து வாரி வழித்து சுருட்டி சுரண்டிக் கொண்டிருந்த வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் படை இன்று வேண்டாம் வரதட்சணை வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.

உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன் தான் பெண் பேசிய வீட்டில் பெண் வீட்டு விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை விருந்து வைத்தே தீருவேன்; இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று மிரட்டியுள்ளார்.

ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம் பெண்ணின் தந்தை விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடுமாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக் கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.

புறக்கணிப்பு
இன்று தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்; அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால் பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை சாபக் கேட்டை சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்; வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.

இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.

ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத் அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.

அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால் இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும்.

இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 5:2)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)

இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.

அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால் இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை!

சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்

பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகின்றது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கின்றது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.

வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர்; அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறுகின்றனர்.

அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது; மேனி புல்லரிக்கின்றது.

மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில் அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால் உதவி செய்ய முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல லட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வர மாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.

இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.

அன்பளிப்பின் அடிப்படை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)
நூல்: புகாரி 6636

இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத் வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது. சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்.

இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து அந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள் வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!

திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை. அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளூரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக் கூடாது.

பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில் பெண் அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளூரிலேயே மாப்பிள்ளை பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் இன்று அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் கொள்கையுள்ள பெண் வேண்டும் என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.

இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற சமூக நிர்ப்பந்தம் உருவாகி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகின்றது. இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது.

எனவே இதைக் கவனத்தில் கொண்டு ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம் முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள்இவிருந்துச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து ஒரு விருந்து வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக் கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும் பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு பாவத்திற்குத் துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நன்றி
RASMINMISC.TK
19:59 | 0 comments | Read More

உயர்த்தி கட்டப்பட்ட கப்ர்கள் இடிக்கப்பட்டதை ஆதரித்த ஷாஃபி இமாம்! கப்ர்களை கட்டி அழகு பார்க்கும் ஷாஃபி மத்ஹபினர்!!



கப்ருகள் தரைக்கு மேல் ஒரு ஜான் அல்லது அது போன்ற அளவிற்கு உயர்த்தப்படுவதைத் தான் நான் விரும்புகிறேன். அது கட்டப்படாமல் இருப்பதையும் பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது (கட்டுவதும் பூசுவதும்) அலங்காரத்திற்கும் பெருமைக்கும் ஒப்பாக உள்ளது. மரணம் இதற்கு உரியதல்ல. முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களின் கப்ருகள் பூசப்பட்டதாக நான் காணவில்லை. மக்கமா நகரில் அதிகாரிகள் அங்கு கட்டப்பட்ட கப்ருகளை இடித்ததைப் பார்த்தேன். இதை மார்க்க அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை. இவ்வாறு ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள்.

 (இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்த நூல்: அல் உம்மு, பாகம்: 1 பக்கம்: 277)

ஷாஃபி மத்ஹபினர் என்று சொல்லுபவர்கள் நிறைந்து வாழும் நமது ஊரில் பள்ளிக்குள் கப்ரும் தர்ஹாக்களும் இன்றும் இருப்பது எப்படி? இன்னுமா தயக்கம்? இமாம்களையே அல்லது மற்றவர்களையே பின்பற்றுவதை விட்டுவிட்டு, குர்ஆனையும் ஹதீசையும் பின்பற்ற முன்வாருங்கள்.

கப்ர் வணக்கத்தை பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ்களுக்கு செயல்வடிவம் கொடுங்கள்.

உயர்த்தி கட்டப்பட்ட கபர்களை இடிக்க கட்டளையிட்ட நபி (ஸல்) அவர்கள்:

‘உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி)
நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரலி) அவர்களுக்கு உயர்த்தி கட்டப்பட்ட கப்ர்களை தரைமட்டமாக்க கட்டளையிட்ட அலி (ரலி) அவர்கள்:

அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த வேலைக்காக என்னை அனுப்பினார்களோ அந்த வேலைக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த வேலை என்னவென்றால்) எந்த உருவச்சிலையையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர். (தரையை விட) உயர்ந்துள்ள எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதீர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ அவர்கள்
நூல்: முஸ்லிம் 1764

கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் தடுத்த நபி (ஸல்) அவர்கள்:

கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) 
நூல்: முஸ்லிம் 1610

கப்ர் வணங்கிகளுக்கு சாபம்:

தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

கப்ரை வணங்குபவர்கள் மோசமான படைப்பினங்கள்:

அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) 
நூல்: புகாரி 427, 434, 1341, 3873
19:53 | 0 comments | Read More

பள்ளிவாசல் நிர்வாகிகளே, மௌலூது பள்ளிவாசல்களில் பாடப்படுவதை தடை செய்யுங்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்….)

அன்புக்குரிய பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு,

இந்த மடல் தூய இஸ்லாமிய சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் உங்களை சந்திக்கட்டுமாக!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரில் சில பள்ளிவாசல்களில் மவ்லூதுகள் என்ற பெயரில் பல பாடல்கள் ஓதப்பட்டு வருகின்றன. ஆனால், இறைவனது திருப்தியைப்பெறும் நோக்கத்தில் ஓதப்படும் மவ்லூதுகளினால் இறைவனது கோபப்பார்வைதான் ஏற்படுகின்றது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

”பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில்) அவனைவிடுத்து வேறுயாரையும் அழைக்காதீர்கள்” (அல்குர்-ஆன் 72:18) என்ற அல்லாஹ்வுடைய கட்டளையை புறந்தள்ளும் விதமாகத்தான் நபிகள் நாயகத்தை அழைத்து பாடப்படும் மவ்லூது வரிகள் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் அவர்களை இறைவனுடைய நிலைக்கு உயர்த்தும் பாடல்வரிகளும் இதில் ஏராளமாக உள்ளன.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். (அல்குர்ஆன் 5:72). எனவே இத்தகைய மாபாதக இணைவைக்கும் காரியத்தை விட்டு நாம் விலகவேண்டும்.

மேலும், இத்தகைய இணைவைப்பு காரியங்களை ஏகத்துவ மையமாக திகழ வேண்டிய பள்ளிவாசல்களில் ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள் இத்தகைய இணைகற்பிக்கும் மாபாதக செயல்களை உங்களது பொறுப்பில் பள்ளிவாசல்களில் செய்ய அனுமதியளிப்பீர்களேயானால் அல்லாஹ் இது குறித்து உங்களிடம் விசாரிப்பான். ஏனெனில், நபிகளார் கூறிக்காட்டியுள்ளார்கள்:

”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். ஒவ்வொருவரும் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்”. (ஆதாரம்: புகாரி: 893)

எனவே, இணைவைக்கும் பெரும்பாவத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும் மவ்லூது, மற்றும் இது போன்ற பாவங்களான தர்கா, தட்டு, தகடு, தாயத்து, போன்ற இணைவைப்பு செயல்களையும், மற்றும் நம்மை வழிகெடுக்கும் பித்அத்களையும் (மார்கத்தின் பெயரால் புதிதாக புகுத்தப்படும் அனாச்சாரங்களையும்) உங்களது பொறுப்பின் கீழ் இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் அனுமதிக்காமல் தடைசெய்யும் படி உரிமையுடன் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். இத்தகைய செயல்களை இனிமேலும் நீங்கள் அனுமதித்தால் உங்களது பொறுப்பின் கீழுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வழிகெடுத்த பாவத்தையும் நீங்கள் சேர்த்து சுமக்க நேரிடும் என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.
19:46 | 0 comments | Read More

குர்ஆனுடன் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகள்

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஒதப்படும் சுப்ஹான மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பல வருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த - மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

1. மவ்லித் வரிகள்:

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !

கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,

அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!

சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)

எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)

2. மவ்லித் வரிகள்:

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ

وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!

நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!

புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)

3. மவ்லித் வரிகள்:

حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ

صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ

தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது.

இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும்.

தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக!

அவர் இழப்பினை அடையவில்லை.

குர்ஆன் வரிகள்:

அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)

4. மவ்லித் வரிகள்:

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ

وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

குர்ஆன் வரிகள்:

நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)

அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)

5. மவ்லித் வரிகள்:

اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ

அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.

குர்ஆன் வரிகள்:

“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)

6. மவ்லித் வரிகள்:

صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ

வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.

குர்ஆன் வரிகள்:

“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

7. மவ்லித் வரிகள்

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)

“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)

8. மவ்லித் வரிகள்

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்

குர்ஆன் வரிகள்:

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

8. மவ்லித் வரிகள்

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ

اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ

وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.

குர்ஆன் வரிகள்:

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)

9. மவ்லித் வரிகள்

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

குர்ஆன் வரிகள்:

“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)

10. மவ்லித் வரிகள்:

قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.

குர்ஆன் வரிகள்:

“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)

11. மவ்லித் வரிகள்:

بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

குர்ஆன் வரிகள்:

“எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)

நபிமொழி:

நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)

12.மவ்லித் வரிகள்

وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا

கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)

13. மவ்லித் வரிகள்:

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

குர்ஆன் வரிகள்:

அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)

உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)

14. மவ்லித் வரிகள்:

إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.

குர்ஆன் வரிகள்:

தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)

15. மவ்லித் வரிகள்:

நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.

நபிமொழிகள்:

அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : அபூதாவூத் 2829)

சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)

16. மவ்லித் வரிகள்

اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ وَمُقِيْلُ الْعَثَرَاتِ

எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.

اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا بِحُبِّهِ كُنْ مُقِيْمًا

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْعُ السَّقَامِ

நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.

குர்ஆன் வரிகள்:

நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)

நபிமொழி:

மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)

17. மவ்லித் வரிகள்

مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.

குர்ஆன் வரிகள்:

“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)

18. மவ்லித் வரிகள்

اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ

ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.

குர்ஆன் வரிகள்:

யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)
19:45 | 0 comments | Read More

This Blog Linked From Here The Web



பெண்களின்  மானம் சார்ந்த தகவல் என்பதால், நீண்ட பதிவாக எழுதி இருகிறோம். குறிப்பாக பெண்களே!, உங்களின் மானத்திற்கும், பாதுகாப்பிற்கும் இந்த கட்டுரை முக்கியம் என்பதால் சிரமம் பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெற வேண்டும், மற்றவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும்.
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் நம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதே வேலையில், மறுபுறம் நம்மை அதிர்ச்சிக் குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன் படுத்தினால் மனித குலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும்.ஆனால் இன்றைய உலகின் எதார்த்தம் அப்படியே தலைகீழாக இருக்கிறது. தன் சக மனிதனுக்கு கேடு விளைப்பதையே தன் தினத் தொழிலாக நினைத்து செயல்பட தொடங்கி விட்டான் மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விட்டான். அந்த வகையில் பெரும்பான்மை மக்களால் கவனிக்கபடாத உடை கழட்டும் ஒரு வக்கிர சைக்கோ கூட்டத்தை தொலுரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்கு தெரியாமல் உங்களின் ஒவ்வொரு அசைவையும் ஒருவன் கண்காணிக்கிறான் என்றால் உங்களால் சாதாரணமாக இருக்க முடியுமா.. ? .. ம்ம முடியும்.. என்னென்றால் அவன் கண்காணிப்பது உங்களுக்கே தெரியாதே…!!. ஒரு அதிர்ச்சியான உண்மை நீங்கள் பெண்களாய் இருந்தால் இந்த கட்டுரை உங்களை பற்றியது தான் கவனமாக படியுங்கள்.

கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாகஇருக்கிறது. இதை எத்தனை பேர் நல்லவிஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறியே மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்குபெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதை தடுக்கும் ,தவிர்க்கும் வழிமுறையையும் இக்கட்டுரையில் இன்ஷாஅல்லாஹ் விரிவாக காண்போம்.



















ரகசிய கேமராக்கள் :


ரகசிய கேமராக்களில் பலவிதங்கள் இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் எந்த பொருளை நினைகிரீர்களோ அதை எடுத்துகொல்லுங்கள் அதில் கேமராவை பொருத்தி கண்காணிக்க முடியும் ! என்றால் பார்த்துகொல்லுங்களேன்.

பொது இடங்களில் கேமிராக்கள் :

பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். கேமராவுடன் உள்ள அலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியா வண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் ஈன மனம் படைத்தோர் பெரும் அளவில் பெருகிவிட்டனர்.


பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். சில மாணவிகளே தன் சக மாணவிகளின் அந்தரங்க விஷயங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. எனவே விடுதியில் தங்கும் மாணவிகள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும். சமீபத்தில் ஒரு கல்லூரி விடுதியில் தன் காதலனுக்கு காண்பிப்பதற்காக விடுதி கழிவறையில் கேமரா பொருத்தி ஒரு பெண் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :

பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.
அதுமட்டுமின்றி தேன்நிலவு செல்லும் ஜோடிகளை குறிவைத்து ஹோட்டல் ரூம்களில், கழிவறையில் கேமராக்கள் பொருத்தும்  கும்பலும் அதிகரித்துள்ளது.ஆதலால் முதலில் வெளி இடங்களில் எங்கு தங்கினாலும் ,நம்மை யாரும் திருட்டுத்தனமாக கண்காணிகிறார்களா என்பதை நாம் முதலில் கண்காணிக்க வேண்டும். ஹோட்டலில் தங்கும்போது அது நல்ல நம்பகமான தங்கும்விடுதியா என்று முடிந்தவரை உறுதிசெய்து கொள்ளவேண்டும். மேலும் அதை போல் குற்றால சீசனுக்கு குளிக்க செல்லும் குடும்ப பெண்களை செல்போன், கேமரா மூலமாக படமெடுக்கும் சம்பவங்களுக்கும் நடைபெற்றுவருகிறது.குற்றாலத்தை பொருத்தவரை அது பெண்கள் குளிக்க பாதுகாப்பான இடமல்ல என்பதை ஆண்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.


பாதுகாப்பு காரணம் என்று கூறிக்கொண்டு உயர்ந்த இடத்தில் உட்காந்து கொண்டு போலீசாரே குளிக்கும் பெண்களை பார்த்து ஜொள்ளுவிடும் கொடுமையும் குற்றாலத்தில் நடக்கிறது. நெடுந்தொலைவு பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பேருந்துப் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பேருந்துப் பயணம் செய்யும் போது அந்தப் பேருந்துகள் ஊருக்கு வெளிப்புறங்களில் உள்ள உணவங்களில் நிறுத்தப்படுகின்றன அல்லவா?. பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் அக்தகைய உணவங்களில் உள்ள கழிவறையைப் பயன் படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிப் பட்ட உணவகங்களில் உள்ள கழிவறைகளில் வீடியோ கேமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர் இந்தக் கோணல் புத்திக்காரர்கள்.
கழிவறைகளின் மேலே உள்ளே விளக்குகிலோ அல்லது சுவற்றில் இருக்கும் குழாயிலோ அல்லது கழிவறையின் கதவிலோ இந்த வீடியோக் கேமராக்களைப் பொருத்தி விடுகின்றனர் இந்தக் கொடூரர்கள். இந்தப் படு பாதக சதிச் செயலைப் பற்றி ஏதும் அறியாமல் பேருந்தில் வந்த பெண்கள் தங்கள் இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ள அந்தக் கழிவறையை பயன்படுத்தி விடுகின்றனர். அங்கே மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் கேமராக்கள் மூலமாக அந்தப் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்த அந்தக் கும்பல் அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர்.
பெண் பித்தும், பணத்தாசையும் பிடித்த இந்தக் கொடுரக் கூட்டம் பெண்களின் ஆபாச வீடியோவை சிடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம்வரை கொண்டு சென்றும் பணம் பார்த்து விடுகின்றனர். கழிவறைக்குள் வைத்து திருட்டுத் தனமாக படம் பிடிக்கப் படும் இந்த ஆபாசக் காட்சிகளை எந்த அருவருப்பும் இல்லாமல் பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருப்பது அதை விட வேதனையான விஷயம். இந்த ஆபாசக் காட்சிகளை தங்கள் அலைபேசிகளில் ஏற்றிக் கொண்டு அதைப் பார்த்து ரசிக்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது.
இப்படிக் கூட அசிங்கமான காரியங்களில் ஈடுபடுவார்களா என்று நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த அவலச்செயல் எப்படிக் கண்டு பிடிக்கப் பட்டது என்றால், திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் கார்ப்பரேஷன் பாத்ரூமில் ஓணம் பண்டிகைக்கு பாத்ரூமை வெள்ளை அடித்து சுத்தம் செய்யும்போது பெண்கள் பாத்ரூமில் 9 இடத்தில் கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேமராவை கழிவறையின் மேலே தொங்கும் மின்விளக்கில் பொருத்தி படம் பிடித்து வந்து உள்ளனர்.
இதை அறிந்த கேரளா பிரஜா என்ற பெண்கள் அமைப்பினர் அந்தக் கழிவறையைப் பூட்டி பெரும் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய அந்தப் பரபரப்பினால் தான் இத்தகைய ஒரு கொடுஞ்செயல் வெளியில் தெரியவந்து உள்ளது. இது கேரளாவில் தானே நடந்தது என்று நாம் சாதாரணமாக எண்ணிக் கொள்ளக் கூடாது, இந்தப் பேருந்து நிலைய சம்பவம் நமக்கு ஒரு உதாரணம்தான், அங்கே செய்தவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள், இன்னும் அகப்படாதோர் எத்தனையோ.
நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையில் இது போல கழிவறையில் கேமரா வைத்துப் படம் பிடிக்கப்பட்ட சம்பவம் வெளியில் தெரிந்து பரபரப்பை ஏற்படுத்த வில்லையா?. இது போல இன்னும் எத்தனை இடங்களில் எத்தனை வக்கிரர்கள் இந்த செயலை செய்து வருகின்றனரோ?. எத்தனை அப்பாவிப் பெண்களின் அந்தரங்கங்கள் கொடூரர்களின் கண்களுக்கு விருந்தாக்கப் பட்டதோ?. இந்தப் படுபாதக செயல்களுக்கு யார் யார் உடந்தையாக இருக்கின்றனரோ? தெரியவில்லை.
இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல பொது இடங்களில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்துவதை அறவே தவிர்த்து விடலாம் அல்லவா?. அப்படியே அந்தக் கழிவறையைப் பயன் படுத்த வேண்டிய காட்டாய சூழல் என்றாலும் கூட இது போன்ற வக்கிரங்கள் எதுவும் கழிவறையினுள் இருக்கின்றனவா என்பதை சோதித்து நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு பின்னர் பயன்படுத்தலாம்.


மருத்துவமனைகள் கவனம் தேவை :

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்கதுணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.


துணிக்கடைகளின் உடைமாற்றும் அறைகளும் அங்கு பொருத்தப் பட்டிருக்கும் கேமிராவும் ,கண்ணாடிகளும்:

நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக் கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்கப் பொறுத்தப் பட்டிருக்கும். வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

1) TRAIL ROOM CAMERAக்களை கண்டறியும் முறை :

TRAIL ROOMல் இருந்துகொண்டு  செல்போன் மூலமாக யாருகாகவாவது CALL செய்து பார்க்கவேண்டும். உங்கள் அழைப்பு நீங்கள் அழைத்தவரை சென்றடைந்தால் அந்த ரூமில் ரகசிய கேமராக்கள் இல்லை. ஒருவேளை உங்கள் அழைப்பு நீங்கள் திரும்ப திரும்ப அழைத்தும்  CALL செல்லவில்லை என்றால் அங்கு ரகசிய கேமரா இருப்பது உறுதி என்று ELECTRONIC பொறியாளர்கள் கூறுகிறார்கள்.


2) TRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை ….

இவைகளைகப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும் போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறு பக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும்.


இவைகளை சுலபமாக கண்டறியும் முறை :

உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவேளை தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி, ஒரு வேலை இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்துகொள்ளலாம்.


                                           வேவுபார்க்கும் கண்ணாடி..!
FACEBOOK புகைப்படங்களும் PHOTOSHOP உக்தியும் :

இது போதாது என்று FACEBOOK-TWITTER-ORKUT போன்ற தளங்களில் பல  பெண்கள் தங்கள் புகைப்படத்தை UPLOAD செய்து இருகிறார்கள் அதை தேடி டவுன்லோட் செய்துகொண்டு PHOTOSHOP SOFTWARE துணைகொண்டு அந்த பெண்களின் முகங்களை நிர்வாண போஸ்டரோடு இணைத்து ,அதை இன்டர்நெட்டில் விற்று காசு பார்கிறது மற்றொரு வக்கிர சைகோ கூட்டம்…
பெண்களிடம் facebook போன்ற பொதுத்தளங்களில் PHOTOக்களை UPLOAD செய்ய வேண்டாம் என்றால்.. அதற்க்கு பல பெண்கள் இது எங்கள் உரிமை அப்படி இப்படி என்று பேசிக்கொண்டு நாம் சொல்வதை கேட்பதில்லை.. இறுதியில் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பெண்களை குறிவைத்தே நடந்து வருகிறது.அப்பாவியான பலபெண்கள் இதற்கு பலியாகி வருகிறார்கள்.
இஸ்லாம் காட்டித்தந்த ஹிஜாப்- பர்தா அணியும் இஸ்லாமிய பெண்கள் 80% இந்த பிரச்சினையில் இருந்து இயல்பாகவே பாதுகாக்கபடுவார்கள் இன்ஷாஅல்லாஹ் இருப்பினும் இவை பற்றிய விழிப்புணர்வு முழுமையாக தேவை ஏனெனில் ஹோட்டல், தங்கும் விடுதியில் இருக்கும் படுக்கை அறை,கழிவறை போன்ற இடங்களில் இந்த கயவர்களின் கைவரிசை இருக்கலாம் ஆதலால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்…
எல்லா இடங்களிலும் நாம் சந்தேகபடமுடியாது, எல்லா இடங்களையும் இது நம்பகமானது  என்று நம்பவும் முடியாது. ஆதலால் முடிந்தவரை நம்பகத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆண்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுப் பெண்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மிக அத்தியாவசிய தேவை, அவசரம் என்றால் மட்டுமே பொது குளியலறை ,கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும்
ரகசிய கேமராக்களை கண்டறியும் கருவி :



நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது, தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:
“இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ, அவ்வாறே ஒரு முஸ்லிமின் உயிரும், உடமையும், மானமும், மரியாதையும் புனிதமானவை என்றார்கள்….”
(புகாரி 67)
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; (அல்குர்ஆன் 4 : 1)

புனிதமான நம் மானம், மரியாதையை அல்லாஹ் காப்பாற்றுவானாக..http://adiraithunder.blogspot.com/2011/11/blog-post_25.html
19:33 | 0 comments | Read More

தவறாக விசாரணைக்கு அழைத்து குணங்குடி ஹனிபா கைது !


 

போலீஸ் நிலையத்தை முற்று கையி...ட்டு ஆர்பாட்டம் !


குணங்குடி ஹனிபா, இவர் த.மு.மு.க., நிறுவனர். சமீபத்தில் சிறை தண்டனை முடித்து விடுதலையானார். கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், விசாரணைக்காக, குணங்குடி ஹனிபாவை காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் த.மு.மு.கவினர் கட்சிப் பிரமுகர்கள், கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தை முற்று கையிட்டு, ஆர்பாட்டம் செய்தனர். துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் உதவி ஆணையர் மனோகரன் மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தினர்.
குணங்குடி ஹனிபா தவறுதலாக, விசாரணைக்கு அழைக்கப்பட்டு விட்டார் எனக்கூறினர். இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து, ஆர்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில், நேற்று சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவம் குறித்து போலீஸ்
உதவி ஆணையர் மனோகரன் கூறியதாவது:காவல்நிலையத்தில் ஏற்கனவே இருந்த கண்காணிப்பு பட்டியலில், குணங்குடி ஹனிபா பெயர் இருந்தது. தற்போது அவர் மீது எந்த வழக்கும், விசாரணையும் இல்லை. ஏற்கனவே இருந்த பட்டியலின் படி தவறுதலாக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விட்டார். பிரச்னை சுமுகமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டது.இவ்வாறு மனோகரன் கூறினார்.
23:55 | 0 comments | Read More

ரேஷன் கார்டுகள் புதுப்பிப்பு பணியில் ஏதாவது சிரமங்கள் இருந்தால் புகார் செய்ய.

cared
ரேஷன் கார்டுகள் புதுப்பிப்பு பணியில், ஏதாவது சிரமங்கள் இருந்தால் புகார் செய்வதற்கான மொபைல்போன் எண்கள்
ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கும் பணியிலோ அல்லது உணவுப் பொருட்கள் பெறுவதிலோ சிரமங்கள் இருந்தால், 7299998002 அல்லது 8680018002 அல்லது 7200018001 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
வரும் பிப்ரவரி 28ம் தேதி முடிய, உரிய நாட்களில் புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் உள்ளது
23:51 | 0 comments | Read More

முஸ்லிம் பெண்களே! Smart Friend காமுகர்கள் ஜாக்கிறதை!

மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும் அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் RSS மற்றும் இந்து முன்னணி கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் “ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மனம் புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு” என அறிவித்துள்ளார். அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது..
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை இரண்டு மாதங்களுக்குள் இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மாற்றுமத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக மதம் மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
இராமநாதபுரம் நகரில் மட்டும் தனித்து 6 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும், ஓட்டைகள் பல கொண்ட நமது நாட்டின் சட்டமும் துணை போகின்றது.
முஸ்லிம் பெற்றோர்களே! சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளையும் , நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும் நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது.
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழி தவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம்:வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாறு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் விருப்பப்படி உரிய கண்காணிப்பின்றி வாழ அனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 24:37).
நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள் (அல்குர்ஆன் 33:32).
1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப் பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.
5. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தர வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.
6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைக்காரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்.
7. தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர்,தந்தை,அல்லது உறவினர்கள் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மார்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள். மிக கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.
9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி. பார்ப்பதற்கு அப்பாவியாகவும்,பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இளகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.
10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி எண்களை தராதீர்கள். அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூண்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் போதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும் அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்துவிடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
12. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.
15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இராமநாதபுரம் அருகில் இருக்கும் வண்ணாங்குன்டில் முஸ்லிம் பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புளுபலிம் எடுக்கப்பட்டு அவமானப்பட்டார்கள் என்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நக்கீரன் உட்பட பல பத்திரிகைகளில் வந்த செய்தியே சாட்சி.
அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றார்கள்
ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.
இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை தங்கள் கூட்டத்தினருக்கு இறையாக்குகின்றான். அவர்களும் சுவைத்தபின்னர் சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.
இறுதியில் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை தொடர்ந்தவனாக அடுத்த இளம் பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னனி போன்ற அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு 1 லட்சம் ரூபாய் என்றும் எந்த போலிஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள்.
ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.
கணவர்கள் வெளிநாட்டில் இருக்க இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும்,நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்ணின் நிலை???
அண்மையில் இராமநாதபுரம் நகரில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் சுருக்கமாக இதோ.
வெளிநாட்டில் இருக்கும் இராமநாதபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு இளம் பெண்னை திருமணம் செய்கின்றார். சிறிது கால வாழ்க்கைக்கு பின்னர் தனது விடுமுறை முடிந்து விடவே திரும்பவும் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றார். பின்னர் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கின்றது. மீண்டும் வெளிநாட்டில் இருந்து கணவர் ஊர் வருகின்றார் இம்முறை மனைவியை தனியாக ஒரு வீட்டில் குடி வைத்து விட்டு சென்று விடுகின்றார்.
தனியாக இருந்த இந்த பெண் தான் வெளியில் செல்லவும், உறவினர் வீடுகளுக்கு செல்லவும் தொடர்ச்சியாக தெருமுனையில் நிற்கும் ஒரு ஆட்டோவை அழைப்பதை வழக்கப் படுத்திக் கொண்டுள்ளார். அந்த ஆட்டோ டிரைவருக்கும் தனது மொபைல் (செல்) நம்பரை கொடுத்துள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இந்த பெண் தனிமையில் இருப்பதை தெரிந்துக் கொண்டு காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு காமுகனுக்கு இந்த பெண்ணின் மொபைல் நம்பரை கொடுத்து விடுகின்றான்.
தனிமையில் இருந்த இந்த பெண்னிற்கு திடீரென உள்ளத்தை உருக்கும் வகையில் எஸ்.எம்.எஸ் கள் வர ஆரம்பிக்கின்றன. உருகிய இந்த பெண் அனுப்புவது யாரென்று தெரிந்து கொள்ளும் வகையில் அந்த எண்ணிற்கு அழைக்கிறார்.
தொடர்பு ஆரம்பமாகின்றது. இந்த பெண்னின் தனிமையையும், அனைத்து விபரங்களையும் தெரிந்து கொண்ட அந்த காவி காமுகன் இந்த பெண்ணிற்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும், அரவணைக்கும் விதத்திலும் பேசி அவளுடன் இரகசிய உறவு கொள்கின்றான்.
கணவன் மீண்டும் விடுமுறையில் வருகின்றான் என்று தெரிந்தவுடன் இருவரும் ஓடிப் போவதற்கு திட்டமிடுகின்றார்கள். காவி காமுகனின் திட்டப்படி கணவன் வந்ததும் முதல் நாள் இரவில் கணவனுக்கு பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விட்டு கணவன் கொண்டு வந்திருந்த பொருட்களுடனும் ஏற்கனவே இருந்த நகைகளுடனும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு காவி காமுகனுடன் மாயமாகிவிடுகிறாள் அந்த பெண்.
காலையில் எழுந்த கணவன் விஷயம் அறிந்து அதிர்கின்றான். வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என்பதால் இரகசியமாக ஒரு வழக்கறிஞர் உதவியுடன், பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கோயம்புத்தூரில் இருப்பதை செல்போன் டவர் மூலம் அறிந்து முகவரி தேடி சென்று வருமாறு அழைக்கின்றான். அவள் வர மறுக்கின்றாள். பின்னர் தனது குழந்தையினை மட்டும் மீட்டு எடுத்துக்கொண்டு கணவன் இராமநாதபுரம் திரும்பி விடுகின்றான்.
அவள் இளமையை நன்கு அனுபவித்த அந்த காவி காமுகன் ஒரு இரவில் அந்த பெண் கொண்டு வந்திருந்த பணம், நகை என ஒட்டுமொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விடுகின்றான்.
கதறிய அவள் மீண்டும் இராமநாதபுரம் வந்து கணவனுடன் சேர்த்துக் கொள்ளும்படி கதறுகிறாள். கணவன் மறுத்துவிடவே, அவளின் பெற்றோரும் கைகழுவி விடவே இன்று வீதிகளில் விபச்சாரியாக திரிகிறாள்.
இது ஒரு உண்மைச் சம்பவம். அண்மையில் நடைபெற்றது. கவுரவம் கருதி பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.
ஆக பெண்களே! மாணவிகளே! உங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கி, உங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட காமுகர்கள் உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவார்கள். ஏமாந்து விட வேண்டாம்!!
பெற்றோர்களே! கணவன்மார்களே! நீங்களும் சற்று சிந்திப்பீர்! வெள்ளம் கரை கடந்தபின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர்! உங்கள் பெண்பிள்ளைகளை கண்காணிப்பீர்!
சிந்திப்பீர் செயல்படுவீர்!!
சூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்!!
முஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாது!! சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்!!
இஸ்லாத்தை வீட்டில் போதியுங்கள்.
நன்றி: புதியதூது வலைப்பூ
20:20 | 0 comments | Read More

இஸ்லாத்தில் பெண்கள் நிலை

Post image for இஸ்லாத்தில் பெண்கள் நிலை
இஸ்லாத்தில் பெண்களுக்கிருக்கிற உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு முன் பெண்களை மற்ற சமூகத்தினர் எப்படி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும்.
 கிரேக்கர்கள் பெண்களை வியாபாரப் பொருட்களாகவே கருதினர். அவர்களுக்கென எந்த உரிமையும் கிடையாது. உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே என்றனர். இன்னும் அப்பெண்களுக்குச் சொத்துரிமை, கொடுக்கல், வாங்கல் போன்ற உரிமைகள் தடுக்கப் பட்டிருந்தன. அவர்களில் பிரபல்யமான தத்துவஞானியான சாக்ரடீஸ் என்பவன் பெண்கள் இருப்பது உலகின் வீழ்ச்சிக்கு மிகப்பெரும் மூல காரணமாகும். மேலும் பெண்கள் விஷ மரத்திற்கு ஒப்பானவர்கள். அம்மரத்தின் புறத் தோற்றம் அழகாக இருக்கும். எனினும் அதன் கனிகளை சிட்டுக்குருவிகள் தின்றவுடனேயே இறந்துவிடுகின்றன என்று கூறியுள்ளான்.
 ரோமானியர்கள் பெண்களை உயிரற்ற ஒரு பொருளாகவே கருதி வந்துள்ளனர். அவர்களிடம் பெண்களுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இருந்ததில்லை. பெண்கள் உயிரற்ற பொருளாகக் கருதப்பட்டதால்தான் அவர்களைக் கொதிக்கின்ற எண்ணெயை ஊற்றியும், தூண்களில் கட்டியும் வேதனை செய்தார்கள். இதுமட்டுமின்றி குற்றமற்ற பெண்களை குதிரைகளின் வால்களில் கட்டி அவர்கள் மரணித்து போகின்ற அளவிற்கு மிக விரைவாக ஓட்டிவிடுவார்கள்.
 பெண்கள் விஷயத்தில் இந்தியர்களின் கண்ணோட்டமும் இவ்வாறுதான் இருந்துள்ளது. அவர்கள் இன்னும் ஒருபடி அதிகமாக கணவன் இறந்துவிட்டால் அவனின் சிதையுடன் மனைவியையும் எரித்து விடுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.
 சீனர்கள் பெண்களை நற்பாக்கியத்தையும் செல்வங்களையும் அழித்துவிடக்கூடிய தண்ணீருக்கு ஒப்பாக்கினர். அவர்கள் தம் மனைவியரை உயிரோடு புதைத்து விடுவதற்கும் விற்றுவிடுவதற்கும் உரிமை பெற்றிருந்தனர்.
 பெண்கள் சாபத்திற்குரியவர்களென யூதர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் அவள் தான் ஆதம்(அலை) அவர்களை வழிகெடுத்து மரக்கனியை சாப்பிடச் செய்துவிட்டாள். மேலும் பெண்ணுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவள் அசுத்தமானவள், வீட்டையும் அவள் தொடும் பொருளையும் அசுத்தப்படுத்திவிடக்கூடியவள் எனவும் கருதுகிறார்கள். பெண்ணுக்குச் சகோதரர்களிருந்தால் அவள் தன் தந்தையின் சொத்தில் சிறிதும் உரிமை பெறமாட்டாள் எனவும் கருதுகிறார்கள்.
 கிறிஸ்தவர்கள் பெண்களை ஷைத்தானின் வாசலாகக் கருதுகிறார்கள். கிறுத்தவ அறிஞர்களில் ஒருவர் பெண் மனித இனத்தைச் சார்ந்தவளல்ல எனக் கூறினார். இன்னும் புனித பூனபெஃன்தூரா என்பவன் கூறினான்: ”நீங்கள் பெண்களைக் கண்டால் அவளை மனி த இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதிவிடாதீர்கள். அது மட்டுமல்ல அவளை ஒரு உயிருள்ள ஜீவனாகக் கூட கருதாதீர்கள். மாறாக நீங்கள் காண்பது நிச்சயமாக ஷைத்தானின் உருவத்தைத்தான். இன்னும் நீங்கள் செவியேற்கும் அவளது சப்தம் பாம்பின் சீற்றம் தான்”"
 மேலும் கடந்த(19ஆம்) நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆங்கிலேயே பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாக இருந்தனர். இதுபோன்றே பெண்களுக்கென எந்த தனிப்பட்ட உரிமைகளும் கிடையாது. இன்னும் அவள் அணியும் ஆடை உட் பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்வதற்கும் உரிமையில்லை. 1567 ஆம் ஆண்டு ஸ்காட்லண்ட் பாராளுமன்றம் பெண்களுக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக்கூடா தென சட்டம் இயற்றியது. இவ்வாறே எட்டாவது ஹென்றியின் காலத்தில் ஆங்கிலேயப் பா ராளுமன்றம் பெண்கள் அசுத்தமானவர்கள் என்பதால் இன்ஜீலைப் படிக்கக் கூடாதென சட்டம் இயற்றியது.
 பிரஞ்சுக்காரர்கள் 586 ஆம் ஆண்டில் பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களா? இல்லையா? என ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு சபையை அமைத்தனர். அச்சபை பெண்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்கள்தான். எனினும் அவர்கள் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்களென முடிவு செய்தது. 1805-ம் ஆண்டு வரை ஆங்கிலேயரின் சட்டத்தில் ஒரு கணவன் தனது மனைவியை விற்பது கூடுமென்றே இருந்துள்ளது. மனைவியின் விலை ஆறு பெனி (அரை ஷிலிங்) என நிர்ணயமும் செய்யப்பட்டது.
 இஸ்லாத்திற்கு முன்பு வரை அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிந்த பிறவிகளாக இருந்தனர். அவளுக்கு சொத்துரிமை கிடையாது. அவர்களை ஒரு பொருட்டாகக் கருதப்பட மாட்டாது. அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மட்டுமல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் தம் பெண்மக்களை உயிருடன் புதைப்பவர்களாக இருந்திருக்கின்றனர்.
 இவ்வனைத்து அநியாயங்களைப் பெண்களை விட்டும் நீக்கவும் நிச்சயமாக ஆண்களும் பெண்களும் சமமானவர்கள்தான் என விளக்கவும்தான் இஸ்லாம் வந்தது. எனவே ஆண்களுக்கு உரிமைகளிருப்பது போல் பெண்களுக்கும் உரிமைகளிருக்கின்றன.
 அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிருந்தே படைத்தோம். பின்னர் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களைப் பல கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் மிக பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர் தாம் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணிய மானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் சூழ்ந்தறிபவன். (49:13)
ஆண் அல்லது பெண் ஈமான் கொண்ட நிலையில் நற்கருமங்கள் செய்தால் அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதமிழைக்கப்பட மாட்டார்கள்.(4:124)
 மனிதன் தன் பெற் றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென நாம் அறிவுறுத்தியுள்ளோம்.(46:15)
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஃமின்களில் பூரண ஈமானுடையவர்கள் அவர்களில் அழகிய குணமுடையவர்களே. தனது மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து மனிதர்களில் நான் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டியவர் யார்? எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உனது தாய் எனக் கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் உ னது தாய் எனக் கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். உனது தாய் என்றே கூறினார்கள். பின்பு யார்? எனக் கேட்டார். உனது தந்தை எனக்; கூறினார்கள்.(புகாரி,முஸ்லிம்)
 இது பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் சுருக்கமான கண்ணோட்டமாகும்.
 பெண்களுக்குரிய பொதுவான உரிமைகள்
நிச்சயமாக பெண்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய பொதுவான உரிமைகள் உ ள்ளன. அவற்றை அவள் விரும்பும்போது பூரணமாகச் செய்து கொள்வதைச் சமூகம் அங்கீகரிக்கவும் செய்கின்றது. அவ்வுரிமைகள் வருமாறு:
 1- சொந்தமாக்கிக் கொள்ளல்: வீடுகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள், வெள்ளி, தங்கம், கால்நடை வகைகள் இவற்றில் விரும்பியவற்றை ஒரு பெண் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளலாம். அப்பெண் தாயாக அல்லது மகளாக அல்லது சகோதரியாக இருப்பி னும் சரி.
 2- திருமணம் செய்வது, கணவனைத் தேர்வு செய்வது, தனக்கு விருப்பமில்லாதவனை ஏற்கமறுப்பது, தனக்கு இடையூறு ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள் வது போன்றவற்றிலும் அவள் உரிமை பெறுகிறாள். இவை பெண்களுக்குரிய உரிமைகள் என்பதில் ஏகமனதான முடிவாகும்.
 3- தனக்கு அவசியமானவற்றைக் கற்றுக் கொள்தல்: உதாரணமாக அல்லாஹ்வை அறிவது, அவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களையும் அதை நிறைவேற்றும் முறையையும் அறிவது. இன்னும் தன்னுடைய கடமைகளையும் தனக்குத் தேவையான ஒழுக்கங்களையும் தான் கடைபிடிக்க வேண்டிய சிறந்த பண்பாடுகளையும் அறிவது. ஏனெனில் வண க்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதை நீ அறிந் துகொள்.(47:19) என அல்லாஹ்வும், கல்வியைத் தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்(இப்னுமாஜா) என நபி(ஸல்) அவர்களும் பொதுவாகவே சொல்லியிருப்பதால்.
 4- செலவு செய்தல்: தனது பொருளில் தான் நாடியதைத் தர்மம் செய்து கொள்வதற்கும், தனக்கும் தனது கணவன், பிள்ளைகள், தாய், தந்தையர்கள் இவர்களில் தான் விரும்பியவர்களுக்கு வீண், விரயமில்லாத அளவுக்கு செலவு செய்து கொள்வதற்கும் உரிமை பெறுகிறாள். இவ்விஷயத்தில் இவர்களும் ஆண்களைப் போன்று தான்.
 5- விருப்பு, வெறுப்புக் கொள்தல்: அவள் நல்ல பெண்களை விரும்பவும், அவர்களைச் சந்திக்கவும், அன்பளிப்புகள் வழங்கவும் செய்யலாம். இன்னும் அவர்களுக்குத் தபால்கள் அனுப்பி அவர்களின் நிலைமைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கஷ்டகாலங்களில் அவர்களுக்கு ஆறுதலும் சொல்லிக் கொள்ளலாம். அல்லாஹ்விற்காக கெட்ட பெண்களை வெறுத்து, அவர்களை விட்டும் ஒதுங்கி விடுவதும் கூடும்.
 6- மரணசாசனம்: அவளின் சொத்தில் மூன்றில் ஒன்றை அவளது ஜீவிதகாலத்தில் மரண சாசனம் எழுதிக்; கொள்வதற்கும் அதை எவ்வித ஆட்சேபணை செய்யாமல் செயல்படுத்து வதும் அவளது உரிமைகளிலுள்ளதாகும். ஏனெனில் மரணசாசனம் எழுதுவதென்பது பொதுவான மனித உரிமைகளைச் சார்ந்ததாகும். எனவே இது ஆண்களுக்கிருப்பது போன்று பெண்களுக்குமிருக்கிறது. ஏனெனில் அல்லாஹ்விடம் நன்மையைப் பெறுவதை விட்டு யாரும் யாரையும் தடுக்க முடியாது. என்றாலும் மரணசாசனம் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமலிருப்பது நிபந்தனையாகும். இதில் ஆண்களும் பெண்களும் சமமே.
 7- பட்டாடை, தங்கம் அணிதல்: பட்டையும், தங்கத்தையும் பெண்கள் அணிந்து கொள்வது கூடும். இவ்விரண்டும் ஆண்களுக்கு ஹராமாகும்.
 8- அலங்கரித்துக் கொள்ளல்: தனது கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்ள உரிமை பெறுகிறாள். எனவே அவள் சுர்மா இட்டுக்கொள்ளவும் விரும்பினால் இரு கன்னங்களிலும் உதடுகளிலும் சிகப்புச்சாயம் வைத்துக் கொள்ளவும் செய்யலாம். மிக அழகிய அணிகலன்கள் அணிந்து கொள்ளலாம். எனினும் முஸ்லிமல்லாத மற்றும் தவறான நடத்தையுள்ள பெண்களுக்கே உரிய ஆடைகளை அணியக்கூடாது. இவற்றை அவள் அணியக் கூடாது என்பது சந்தேகம் தவறுகளிலிருந்து தூரமாகுவதற்காகவே.
 9- உண்பது, குடிப்பது: நல்ல, சுவையான பானங்களை பருகவும் அதுபோன்ற உணவுகளை உண்ணவும் அவளுக்கு உரிமையுண்டு. உண்பதிலும் குடிப்பதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எந்தப் பாகுபாடுமில்லை. இவ்விரண்டில் ஆண்களுக்கு அனுமதி க்கப்பட்டுள்ள அனைத்தும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிற ன்: உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண்விர யம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை (7:31) இங்கு இருபாலாரையும் நோக்கியே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
 கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்
ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கடமைகளிருக் கின்றன. இக்கடமைகள் தனது கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கட மைகளுக்குப் பகரமாகிவிடுகின்றன.
 அவை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாற்றமில்லாக் காரியங்களில் கணவனு க்கு கட்டுப்பட்டு நடப்பது, அவன் உண்பதற்கும் பருகுவதற்கும் தயார் செய்து கொடுப்ப து, அவனது படுக்கையைச் சீராக வைத்துக்கொள்வது, அவனது குழந்தைகளுக்குப் பா லூட்டுவது, அவர்களை வளர்ப்பது, அவனது பொருளையும் மானத்தையும் பாதுகாப்பது, தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்வது, அனுமதிக்கப்பட்ட வகைகளில் அவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்வது, அழகுபடுத்திக் கொள்வது போன்றவைகளாகும். இவை ஒரு பெண் அவளது கணவனுக்குச் செய்ய வேண்டிய கட்டாயக் கடமைகளிலுள்ள வையாகும்.
 அல்லாஹ் கூறுகிறான்: மனைவியர் மீது கணவர்களுக்கு உள்ள உரிமைகளைப் போல வே முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமையுண்டு (2:228)
 முஃமினான பெண் இவற்றை அறிந்து எவ்வித நாணமும் பயமுமின்றி இவ்வுரிமைகளைக் கேட்டுப் பெறவேண்டும் என்பதற்காக இவற்றைக் கூறுகிறோம். இவைகளில் சிலவற்றை அவள் மன்னித்துவிட்டாலான்றி கணவன் இவைகளை முழுமையாக மனைவிக்கு வழங்குவது கடமை. அவள் விட்டுக் கொடுப்பதும் கூடும்.
 1- அவன் தனது வசதி, ஏழ்மை நிலையைக் கவனித்து அவளுக்குச் செலவுக்குக் கொடுக்க வேண்டும். ஆடை, உணவு, குடிப்பு, மருத்துவம், தங்குமிடம் இவைகளுக்கான செலவை அவள் பெற்றுக் கொள்வாள்.
 2- ஆண், பெண்ணை நிர்வகிக்க வேண்டியவனாகயிருப்பதால் அவளின் மானம், மரியாதை, உடல், பொருள், மார்க்கம் இவை அனைத்திலும் அவளைப் பாதுகாக்க வேண்டும். ஒரு பொருளைப் பாதுகாத்துக் கவனித்து வருவதென்பது அதனை நிர்வகித்து வருபவ னின் பொறுப்பிலுள்ளதாகும்.
 3- அவளின் மார்க்க விஷயங்களில் அவசியமானவற்றை அவளுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். அவனுக்கு இயலாவிட்டால் அல்லாஹ்வின் இல்லங்களிலும், கல்விக்கூடங்களிலும் நடைபெறுகின்ற பெண்களுக்குரிய மார்க்கக் கூட்டங்களுக்குச் சென்றுவர அனுமதியளிக்க வேண்டும். ஆனால் அவ்விடங்கள் குழப்பத்தை விட்டும் பாதுகாப்பானதாக இருப்பதோடு அவனுக்கோ அவளுக்கோ அதில் இடையூறு ஏற்படாமலிருப்பதும் அவசியமாகும்.
 4- அவளிடம் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள்.(4:119)
 நல்ல முறையில் வாழ்க்கை நடத்துதல் எனபதில் உடலுறவில் அவளுக்குரிய உரிமை யைக் குறைத்திடாமலிருப்பது, திட்டுவது, இழிவுபடுத்துவது, கேவலப்படுத்துவது போன்ற வற்றால் அவளுக்கு தொல்லை கொடுக்காமலிருப்பது அகியவை அடங்கும். இன்னும் அவ ள் தனது உறவினர்களைச் சந்தித்து வருவதால் குழப்பம் ஏற்படுமென அவன் பயப்படாத போது அவளைத் தடுக்காமலிருப்பதும், அவளுக்கு முடியாத வேலைகளைச் செய்யும்படி சிரமம் கொடுக்காமலிருப்பதும், சொல்லிலும், செயலிலும் அவளுடன் அழகியமுறையில் நட ந்து கொள்வதும் அதில் அடங்கும்.
 ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: தம் மனைவியரிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். உங்களில் நான் எனது மனைவியரிடத்தில் சிறந்தவராக இருக்கின்றேன்.(திர்மிதி) மேலும் கூறினார்கள்: பெண்களைக் கண்ணியமாக நடத்துபவர்களே நல்லவ ர்கள். அவர்களை இழிவாக நடத்துபவர்கள் தாம் கெட்டவர்கள்.
இஸ்லாம்ஹவுஸ்.காம்

04:14 | 0 comments | Read More